அர்த்தாஷ்டம சனி தரும் தொல்லைகள் விலக


அஷ்டம் என்பது எட்டு ஆகும். அர்த்தாஷ்டமம் என்பது எட்டில் பாதியாகும். அதாவது சந்திரனுக்கு (ராசிக்கு) 8-ம் இடத்தில் கோள்சார ரீதியாக சனி இருந்தால் அது அஷ்டமத்து சனி, அதே சனி சந்திரனுக்கு (ராசிக்கு) 4-மிடத்தில் இருந்தால் அது அர்த்தாஷ்டம சனியாகும்.

ராசிக்கு நான்காமிடத்தில் வீற்றிருக்கும் சனி தாயாருக்கு உடல்நலக் கோளாரையும், வண்டி, வாகனங்களில் பாதிப்பையும், சுகக்கேட்டையும் தரக்கூடியவர். இப்போதைய நிலைமைப்படி 2014 டிசம்பர் 16ம் தேதி முதல் சிம்ம ராசிக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். இந்த அர்த்தாஷ்டம சனி நடக்கும் போது மன சஞ்சலம், உடல் நலம் பாதிக்கப்படும், தொழில் வளர்ச்சி இல்லாமல் இருக்கும். எப்போதும் மனம் ஏதோ சிந்தித்துக் கொண்டே சஞ்சலமான நிலையில் இருக்கும்.

இவர்கள் பரிகாரமாக, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து, புனுகு பூசி, சாம்பல் பூசணி (வெண் பூசணி) சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்து வரலாம். தொடர்ந்து 9 சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லலெண்னையோடு எள் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வரலாம் அல்லது சதுர்த்தி நாளிலோ, அஷ்டமி நாளிலோ பைரவருக்கு அர்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக்கூடிய தொல்லைகள் விலகும்.



Leave a Comment