நாங்குநேரி சுவாமி தெய்வநாயகப் பெருமாளுக்கு பங்குனி திருக்கல்யாண தோ்த்திருவிழா


108 திவ்யதேசங்களில் ஒன்றான பாண்டியநாட்டுத் திருப்பதியான நாங்குநேரியில் சுவாமி ஸ்ரீ வரமங்கா ஸமேத தெய்வநாயகப் பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்ச்வம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது..
திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் அழைக்கப்படுகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத் திருத்தலத்தில் பல்வேறு உற்ச்சவங்கள் மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு திருக்கல்யாண திருவிழா ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி மதுரகவி ஸ்ரீ வானமாமலை இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமி தயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9ம்திருநாளான இன்று காலை 6.00 மணிக்கு ஸ்ரீவரமங்கை நாச்சியார் சமேத ஸ்ரீ தெய்வநாயகப்பெருமாள் தேருக்கு ஏழுந்தருளினார். காலை 9.00 மணி அளவில் வானமாமலை ஜூயா் சுவாமிகள் எழுந்தருள அவருக்கு கோயில் மரியாதைகள் செய்யப்பட்டது. பின்னர் ஜீயா் சுவாமிகள் தோ் வடம் பிடித்தா். அதனை தொடா்ந்து ஆயிரக்கணக்கான ஊா்மக்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். பொதுவாக தென் தமிழகத்தில் தோ் முற்றிலும் மனித முயற்ச்சியிலே இழுக்கப்படும். தோ் 4 ரத வீதிகளில் வலம் வந்தது. விழாவினை வானுமாமலை மடத்தினா் செய்திருந்தனா். நாளை பங்குனி உத்திரத்தன்று பெருமாள் தாயார் திருக்கல்யாணம் மற்றும் பட்டணபிரவேசம் சிறப்பாக நடைபெறும்.



Leave a Comment