தீபத்தன்று மட்டுமே நிகழும் அபூர்வ கோலம்


திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளுள் ஒன்று.
அந்த அற்புதக் காட்சியைக் காண உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் பல நூறு லிட்டர் நெய்யில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இது உலகத்துக்கு வளத்தையும் ஒளியையும் வழங்கும் நிகழ்வு. அந்த நாளில், இறைவன் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருப்பார்.
மகா தீபம் ஏற்றியதும் பக்தர்களுக்கு காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஐந்தே நிமிடங்களில் உடனடியாக பிரகாரத்துக்குள் குடியேறிவிடுவார்.
இந்த அதிசயக் காட்சி அங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.
இப்படி இறைவன் காட்சியளிப்பதற்கு ஒரு புராண காரணம் கூறப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் என அத்தனைபேரும் சிவபெருமானை மட்டுமே சுற்றி, வழிபட்டு வந்துகொண்டிருந்த போது, பார்வதி சிவன் மீது மிகுந்த கோபம் கொண்டாராம்.
அதனால் சிவனும் சக்தியும் ஒன்று தான், ஆணும் பெண்ணும் சமம் தான், அவர்களுக்குள் வேறுபாடு எதுவும் கிடையாது என சக்திக்கும் தன்னுடைய பக்தர்களுக்கும் ஒருசேர உணர்த்தவே சிவன் அர்த்தநாரீஸ்வரர் கோலம் பூண்டு, சக்தியை மகிழ்வித்ததாக, புராணங்கள் குறிப்பிடுகின்றன.



Leave a Comment