கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்...


மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று மாலை வெகு விமரிசையாக நடந்தது - மேளதாளம், தப்பாட்டம் முழங்க ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் - கிராமம் முழுவதும் மக்கள் தலைகளாகவே காணப்பட்ட கோலாகலம்.

மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்டம் இன்று மாலை வெகு விமரிசையாக நடந்தது.

பெரிய தேரில் முத்துமாரியம்மனும்,  அய்யனார் ஒரு தேரிலும், முருகன் ஒரு தேரிலும் மொத்தம் 3 தேர்கள் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. மேளதாளம், தப்பாட்டம் முழங்க, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் தாயே முத்துமாரியம்மா என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.

இந்த தேர்த்திருவிழாவை காண பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அருள்மிகு முத்துமாரியம்மன் அருளைப் பெற்றுச் சென்றனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டு கோலாகலமாக நடந்தது.



Leave a Comment