துலாம் ராசிக்கு ஏப்ரல் மாதம் எதிர்ப்புகள் நீங்க....


துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு  - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

01-04-2024 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-04-2024 அன்று சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

22-04-2024 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-04-2024 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

திட்டங்களை தீட்டுவதில் கெட்டிக்காரரான துலா ராசியினரே நீங்கள் அதை செயல்படுத்துவதிலும் வல்லவர். இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.  

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  

அரசியல் துறையினருக்கு மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

சித்திரை 3, 4 பாதங்கள்:

இந்த மாதம்  தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

சுவாதி:

இந்த மாதம்  குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம்  அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

 



Leave a Comment