தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா...


நெல்லை மாவட்டம் வள்ளியூர் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது . சாஸ்தா கோவிலுக்கு என்று பெரிய தேர் இழுப்பது தமிழகத்திலே வள்ளியூர் அருகே உள்ள சித்தூரில் மட்டும் தான்.

கேரளாவை பூர்விகமாகக் கொண்டு தென்மகாராஜா இங்கு அருள் பாலித்து கொண்டு இருப்பதால் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் இத்தேரோட்டத்தில்  கலந்து கொள்வது வழக்கம்.   மகர சங்காரந்தி என்றாலே சபரிமலை நினைவுக்கு வருவது போல் பங்குனி உத்திரம் என்றாலே சித்தூர் என்று தான் தென் மாவட்டங்களில் பலருக்கு நினைவுக்கு வரும். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சித்தூரில் உள்ள தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் .

சித்தூரில் கோயில் கொண்டுள்ள தென்கரை மகாராஜேஸ்வரர் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்க மலையாள நாட்டில் இருந்து புறப்பட்டு சென்று பல அற்புதங்கள் புரிந்து இறுதியில் நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் தென்பகுதியில் தனது ராஜ்யத்தை நிறுவினார். இவர் அரசரின் மகனாவார். தென்கரை மகாராஜேஸ்வரர் இறந்த பிறகும் அவர் ஆட்சி செய்த மக்களுக்கு பல நோய்களை தீர்க்கும் அற்புதங்கள் புரிந்து வருவதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

கேராளவிலும் , தமிழ் நாட்டிலும் வாழும் அநேக குடும்பங்களுக்கு சாஸ்தா கோவிலாக சித்தூர் மகாராஜா கோவில் உள்ளது. இக்கோவிலின் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலா, அபிஷேகம், விசேஷ பூஜைகள், நடைபெற்றது. பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.  அலங்கரிக்கப்பட்ட தேரை வள்ளியூர் டி.எஸ்.பி யோகேஷ் குமார் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

சாஸ்தா கோவிலுக்கு என்று பெரிய தேரை இழுப்பது சித்தூரில் மட்டும் தான் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. மேலும் இந்த திருவிழாவில் மட்டுமல்லாதது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்



Leave a Comment