மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ பக்தர்களின் சிவாலய ஓட்டம்...


குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவ பக்தர்களின் சிவாலய ஓட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது கோவிந்தா கோபாலா கோஷத்துடன் குமரி கேரளாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரி நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் சிவ பக்தர்களின் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம் அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறை மஹா தேவர் கோவிலில் இருந்து துவங்கும் இந்த ஓட்டம் திக்குறிச்சி திற்பரப்பு, திருநத்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம்,கல்குளம், மேலாங்கோடு திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு , திற்பன்னிக்கோடு உள்ளிட்ட கோவில்களுக்கு சுமார் 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி சென்று இறுதியாக 12 வது சிவாலயமான திரு நட்டாலம் பகுதியில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் முடிவடைகிறது.

இந்த ஓட்டத்தில் குமரி கேரளாவை சேர்ந்த பல்லாயிரகணக்கான சிவ பக்தர்கள் ஏகாதசி நாளில் தீயில் படாத உணவருந்தி விரதம் இருந்து கோவிந்தா கோபாலா கோஷத்துடன் ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவராத்திரி தினத்தையொட்டி நடைபெறும் இந்த ஓட்டம் குமரி மாவட்டத்தை தவிர வேறெங்கும் நடைபெறாது என்பதால் இந்த ஓட்டம் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.



Leave a Comment