நெல்லையப்பர் தபசுக்காட்சி


நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் தபசுக்காட்சி விமர்சையாக நடந்தது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பிரசித்திபெற்றது. இவ்விழா நவம்பர் 3ம் தேதி காலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். காந்திமதி அம்மன் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு காலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். நேற்று பகலில் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி,அம்பாளை தரிசித்தனர். நேற்று மாலை சுவாமி, அம்பாள் நெல்லை டவுன் நான்கு வீதிகளிலும் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி காலை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ விழா நடை பெற்றது. 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடைபெற்றது. 16ம் தேதி வரை அம்பாள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலாவும் நடக்கிறது.



Leave a Comment