தன்வந்திரி பகவான்!


தன்வந்திரி திரயோதசி மகிமை!
“ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்பாக வரும் தேய்பிறை திரயோதசி அன்று தன்வந்தரி பகவானைக் குறித்து விரதமிருந்து முறையாக வழிபட்டு பூஜை செய்து வீட்டில் தீபங்கள் ஏற்றிய பின் புனித தீர்த்தங்கள் நீர்நிலைகளுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தீப தானம், வஸ்திர தானம் செய்தாலும் யமனைக் குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டகத் துதி படிப்பதாலும் துர்மரணங்களிலிருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளைப் பெறமுடியும்” என்று யமதர்மராஜா கூறியதாக வரலாறு உண்டு.
இந்த தன்வந்தரி திரயோதசி விரதத்தை இயலாமையால் கடைப்பிடிக்காமல் விட்டவர்கள் மகாவிஷ்ணுவுக்குரிய சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேருகின்ற நாளில் காலை உதய காலத்திலிருந்து இரவு வரை ஒரு பொழுது விரதமிருந்து இரவு பாலும் துளசி தீர்த்தமும் அருந்தி விரத பூஜையைச்செய்து வரலாம்.
நமது உறுப்புகள் அனைத்திற்கும் களைப்பு தோன்றும்போது உடலுக்குள் உணவு மற்றும் ஆன்மிக சக்தியை ஏற்றுதல் அவசியமான ஒன்று. இதற்கு ஆன்மிக வழியில் உதவுவதே தன்வந்திரி திரயோதசி விரதம். அங்க இயக்கங்கள் முறையில் யோகாசனங்கள் ஓம்கார தியானம் போன்றவை செய்யலாம்.



Leave a Comment