கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பெயர்ச்சி... அற்புதமான வீடியோ காட்சி


சீர்காழி அருகே நவகிரகங்களில் கேது ஆலயமாக வணங்கப்படும், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில்  மதியம் 03.41 க்கு கேது பெயர்ச்சி நடைபெற்றது.

நவகிரகங்களில் சாயா கிரகங்கள்( நிழல் கிரகங்கள்) என்று அழைக்கப்படுபவை ராகு, கேதுக்களாகும். ராசிக்கட்டங்கள் 12 ல் மற்ற கிரகங்கள், நகரும் திசைக்கு எதிர் திசையில் இவை நகர்கின்றன. ஜோதிட ரீதியாக ராகு யோகக்காரகன் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒன்றரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு கேதுக்கள், ராசி மண்டலத்தில் நேர் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ஒரு ராசிக்கு 3.6.11 ஆகிய இடங்களில் ராகு, கேதுக்கள் இருந்தால் நன்மை செய்யும் என்பது சோதிட ரீதியான காரணமாகும்.

ராகு – கேதுக்கள் தோஷ பரிகாரம் செய்யும் ஆலயமாகவும் வாசுகி பாம்பு வழிபாடு செய்த ஸ்தலம் மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி ஆலயத்தில்,செளந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகிறார் இங்கு கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.  பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார். இவர் மனக்கோளாறு, தோல்வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர்.

கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.இன்று மதியம் 3 மணி 41 வினாடிக்கு கேது துலாம் ராசியிலிருந்து ராசிக்கும், ராகு மேஷம் ராசியில் மீனம் ராசிக்கு  பெயர்ச்சி அடைகின்றார். இதனை முன்னிட்டு கீழபெரும்பள்ளம் கேது பகவான் கோவிலில்  சிறப்பு யாகம், அபிஷேகம்  நடைபெற்றது.இதில் திரெளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment