தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த திருப்பதி ஏழுமலையான்...


திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் தங்கத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாடவீதியில் காத்திருந்த திரளான பக்தர்கள் திரண்டிருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். மாட வீதிகள் எங்கும் 'கோவிந்தா... கோவிந்தா' எனும் பக்தி பரவச கோஷம் விண்ணைப் பிளந்தது. இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.



Leave a Comment