சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த திருப்பதி ஏழுமலையான்....


திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில்  சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவில் பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நாளை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

 



Leave a Comment