மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வ திருமண விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசணம்


நாமக்கல் மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வ திருமண விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசணம். நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை பீமேஸ்வரர் ஆலயத்தில் இன்று தெய்வத்திருமண விழா மிக விமசர்சையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்றபின் மணப்பள்ளி ஸ்ரீதேவி பூதேவி சமதே வரதராஜ பெருமாள் கோவில் இருந்து பக்தர்கள் சீர் தட்டுகள் கொண்டு கோவில் முன் அமைக்பட்ட தெய்வ திருமண விழா பந்தலில் சேர்க்கப்பட்ட பின், விநாயகர் தெய்வ திருமண எம்பெருமான் திரிபுரசுந்தரர் தெய்வ திருமண அன்னை திபுரசுந்தரி அம்பாள் திருக்கல்யாண நிகழ்வுகளை வேத முறைப்படி சிவாச்சாரியார்கள் விநாயகர் வழிப்பாட்டுடன் துவங்கி ஒவ்வொரு திருமண விழா நிகழ்வுகளை மிகச்சிறப்பாக துவங்கி செய்தனர்.

அப்போது சுவாமிகளுக்கு கங்கணம் கட்டுதல் மாலை மாற்றுதல் விழா நடைபெற்ற பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான திருமாங்கல்யதாரண நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது அப்போது பக்தர்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா அண்ணாமலையானுக்கு அரோகரா கோசமிட்டனர். பின் திரிபுரசுந்தரருக்கும் திரிபுரசுந்தரிக்கும் பல்வேறு தீப உபசரிப்புகள் காண்பிக்கபட்ட பின் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பீமேஸ்வரர் உழவாரப் பணிக்குழு மற்றும் மணப்பள்ளி கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர், வருகை புரிந்து அனைவருக்கும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.



Leave a Comment