திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்ர மாலைகள் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி பவித்ர மாலைகள் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சம்பங்கி மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.  

இதில் இரண்டாம் நாளான நாளை யாக சாலையில் வைக்கப்பட்ட பவித்திரம் மாலைகள் அனைத்தும் உற்சவருக்கும், மூலவருக்கும், கோயிலில் உள்ள இதர சன்னதியில் மூலவருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை மறுநாள் யாகம் பூர்னாவூதியுடன் பவித்திர உற்சவம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பவித்ர உற்சவத்தில் கோயில் பெரிய ஜீயர் ,சின்ன ஜீயர் ,செயல் அலுவலர் தர்மா ரெட்டி, துணை செயல் அலுவலர் லோகநாதம், வி.ஜி.ஒ.பாலிரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பவித்ர உற்சவம் நடத்துவதும் முக்கிய நோக்கம் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலோ அர்ச்சகர்களால், பணியாளர்களால் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக இந்த பவித்ர உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பதினாறாம் நூற்றாண்டு வரை இந்த பவித்ர உற்சவம் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் தவறாமல் பவித்திர உற்சவத்தை ஏழுமலையான் கோயிலில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment