சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி


சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உங்களின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார் விநாயக பெருமான்.

எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் விநாயகர் பூஜை செய்து தொடங்குவதால், நினைத்த காரியம், செயல் என்று எதுவாயினும் எளிதில் முடியும். இப்படி இருக்க மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் செயலை தொடங்குவது இன்றும் சிறந்தது.

 ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி நாள் ஆகும்.  நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். 'மகாசங்கடஹர சதுர்த்தி' அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.



Leave a Comment