பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை ஏன்?


தமிழ்நாட்டிலேயே, கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும் 41 அடி நீளமும் 21 அடி அகலும் கொண்டதாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகும். 12 அடி உயரமும் 20 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாகும்

பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்னைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.

பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிப்பாடு செய்தமைக்கு ஒப்பாகும்.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

 



Leave a Comment