திருப்பதியில் பக்தர்களுக்காக....


பக்தர்களுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்ற திருமலை முழுவதும் 1,400 சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் பாதுகாப்பு கருதி 1,400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையை பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்ற தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுடன் இணைந்து சிசிடிவி கேமரா, டிவி டிஸ்ப்ளே உள்ளிட்டவை வாங்கப்பட்டு பொருத்தப்படவுள்ளது. இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், முதற்கட்டமாக 250 சிசிடிவி கேமராக்கள் கோவிலுக்குள் மட்டும் 30 நாட்களுக்குள் பொருத்தப்பவுள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்பு பணிகள் குறித்து திருமலையில் என்.எஸ்.ஐ.சி நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக சீனிவாச ராஜூ கூறினார். படிப்படியாக திருமலை முழுவதும் மீதமுள்ள இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Leave a Comment