பெரியகாண்டியம்மன் கோயிலில்...திருவிளக்கு பூஜை!


கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி சின்னரெட்டிபட்டியில் பெரியகாண்டியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு  பூஜை நடந்தது. இதில் பித்தளையால் ஆன அன்னபூரணி அம்மன் சிலை மற்றும் பூஜைபொருட்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக 1008 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், மாங்கல்யம் நீடித்திருத்தல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை, என வரம் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு தூவி பெண்கள் பக்தியுடன் வழிபட்டனர்.  

பின்பு அலங்காரம் செய்த ஸ்ரீ பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பூஜையில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள நாகனூர், பொருந்தலூர், தோகைமலை, கல்லடை, கழுகூர், கூடலூர், கள்ளை, பாதிரிப்பட்டி,  ஆகிய ஊராட்சி பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment