புண்ணிய விரதங்களுள் ஒன்றான ஆடி அமாவாசை


ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி அமாவாசை விரதம் என சிறப்பிக்கப்படுகிறது. இறந்த தமது தாய் தந்தையர் நற்கதி அடைவதற்காய் பிள்ளைகளால் இவ் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றைய நாளில் விரதமிருந்து, பிதிர்களுக்கு சிராத்தம் செய்து மகிழ்வித்து, ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குவது வழமை.

விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் வாழை இலைகளை இட்டு, சமைத்த உணவு, துணிகள் ஆகியவற்றை வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

ஆடி அமாவாசை தினத்தில் முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு உலகலாவிய ரீதியில் காணப்படும் சகல இந்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதோடு, அடியார்கள் புனித நீராடி வருகின்றனர்.



Leave a Comment