திருச்சி பாண்டுரங்கர் விவாக உற்சவம்!


திருச்சி அல்லூர் அக்ரஹாரத்தில் வருடந்தோறும் பாண்டுரங்க விவாக வைபவம் நடத்தப்டுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் பங்கேற்று நடத்தும் பாண்டு ரங்க விவாக நிகழ்ச்சி  இன்று (24-ந்தேதி) தொடங்கி 4 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு வசந்த மாதவ பூஜை, 10 மணிக்கு மோகனூர் ஸ்ரீ காந்த், கவுண்டின்யன், ஞானேஸ் வரன் மற்றும் பாலாஜி பாகவதர் உளிட்டோர் நடத்தும் அஷ்டபதி பஜனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் சொற்பொழிவு நடக்கிறது.

அதன் தொடர்சியாக நாளை (25-ந்தேதி) புதன்கிழமை காலை 8 மணிக்கு உஞ்சஸ்ருத்தி, அஷ்டபதி பஜனை நடக்கின்றன. இரவு 7 மணிக்கு சொற் பொழிவு, 9.30 மணிக்கு உடையாளூர் கல்யாணராம பாகவதர் குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தனம் நடக்கிறது.

தொடர்ந்து நாளை மறுதினம் 26-ந்தேதி (வியாழக் கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி உஞ்சவ்ருத்தி, 9.30 மணிக்கு கல்யாண பஜனை, 11.30 மணிக்கு ஸ்ரீ பாண்டுரங்க விவாகம், திருமாங்கல்யதாரணம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சொற்பொழிவு, 10 மணிக்கு வசந்த கேளிக்கை, பல்வளிம்பு ஆகியவை நடைபெறுகிறது.  நிகழ்ச்சி நிறைவு நாளான 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு அல்லூர் வெங்கட்ராம பட்டாச் சாரியார் தலைமையில் ஆஞ்சநேய உற்சவத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. இந்த வைபவ நிகழ்ச்சியில் பங்கபெறுவதற்காக எண்ணற்ற பக்தர்கள் திருச்சி அக்ரஹாரத்திற்கு வருகிறார்கள்.



Leave a Comment