நாக தோஷம் நீங்க செய்யும் கருடன் வழிபாடு!!


கருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை பெறலாம்.


திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில்  இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்கள் தீரும்.
 
பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.
 
நாட்களும் பலன்களும்:
 
ஞாயிறு: நோய் நீங்கும். திங்கள்: குடும்பம் செழிக்கும். செவ்வாய்: உடல் பலம் கூடும். புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட ஆயுளை  பெறலாம். வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும். சனி: மோட்சம் கிடைக்கும்.
 



Leave a Comment