திருச்செந்தூர் முருகன் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி


திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வருகிற 19-ந் தேதி 10-ம் திருவிழா அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 10-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4.50 மணிக்கு கும்ப லக்கனத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.


 



Leave a Comment