வடிவுடையம்மன் கோயில் தேர் உற்சவம்


சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் தேர் உற்சவம்  நடைபெற்றதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க 2௦௦௦ஆண்டு பழமையான திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகோவிலில் கடந்த 1941ம் ஆண்டு மன்னர் காலத்தில்  தேர் உற்சவம் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த  2016 ம் ஆண்டு  46 இலட்சம் மதிப்பில் தேக்கு மற்றும் இலுப்பை மரத்தினால் 41அடி உயர திருத்தேர் புதியதாக செய்யப்பட்டு நான்காவது  ஆண்டாக இன்று  தேர் உற்சவம்  நடைபெற்றது. மாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான  இன்று  சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரி அம்மனை  அலங்கரித்து 108 சங்க நாதம் முழங்க சிவாச்சாரியார்களின் பஜனை கோஷங்களுடன் நான்கு மாட வீதிகளிலும் சுற்றி வரும் தேரை  பக்தர்கள்  வடம் பிடித்து இழுத்தனர்.

இதனையடுத்து வருகின்ற 18 ம் தேதி சுந்தரர்க்கும் சங்கிலிநாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம்  நடைபெற உள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்கள் முருகர் அம்மன் சிவன் வேடமிட்டு  நடனமாடி தேரை வரவேற்றனர் வழி நெடுகிலும்  ஏராளமான மக்கள்   காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் 

வரலாற்று சிறப்புமிக்க வடிவுடையம்மன் கோவில் ஆண்டு தோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டபட்டு வருகிறது முக்கிய நிகழ்வான  தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஓம் நமச்சிவாய தியாகராய என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்   
 



Leave a Comment