திருப்பதியில் பிரேக் தரிசனம் தற்காலிக ரத்து ! 


திருமலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறி உள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரதசப்தமி உற்சம் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ரதசப்தமி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.

மாட வீதியில் மலையப்ப சுவாமி வலம் வரும் அழகான காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவது வழக்கம். இந்தாண்டு அவ்வாறு எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12-ம் தேதிகளில் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும் அந்த நாள்களில் விஐபி-க்கள் நேரடியாக வந்தால் மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 12-ம் தேதி தர்ம தரிசனம், நடைபாதை மார்க்கத்தில் நடந்து செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.



Leave a Comment