வினாயகர் வழிபாடு.... ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு முறை.... 


விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். விநாயகரை வழிபடும் அனைவருக்கும் அவர் ஓடோடி வந்து அருள் புரிவதால், எல்லோருக்கும் பொதுவாகவும் அனைவரும் பூஜிக்கற மாதிரியும் இருக்கிறார். ஒவ்வொரு ராசியினரும் விநாயகரை வழிபடுவதற்கு என்று ஒரு தனி முறை இருக்கிறது. 


மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகாரர்கள், வளர்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபட வேண்டும். அதாவது சூரிய உதயத்திற்கு பின்னர் காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் தேங்காய் உடைத்து, அருகம்புல்லினால் வினாயகரை அர்ச்சனை செய்து வரிபட வேண்டும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன், பால் படைத்தும், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோதகமும், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பாசிப்பயறும் நைவேத்தியம் செய்தும் விநாயகரை வழிபட வேண்டும். 

மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வளர்பிறை செவ்வாய், சனிக் கிழமைகளில் தேங்காய் உடைத்தும், செவ்வரலி பூவினால் வினாயகரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பசும்பால், அப்பம், வடை, அவல், பொரிகடலை போன்றவற்றை நைவேத்தியம் செய்தும் வெற்றிலை, பழம், பாக்கு வைத்து விநாயகரை வழிபடுவது நல்லது. 

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள்,  வளர்பிறையில் வரும் செவ்வாய், சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபடலாம். அதாவது விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில்  காலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரையான காலத்தில் தேங்காய்  உடைத்து, வெள்ளெருக்கு மலர் அல்லது வெள்ளரலி பூ அல்லது வெண்தாமரை மலரினால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

மேலும், பசும் பால், அவல், கொண்டக்கடலை சுண்டல், பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வழிபடவேண்டும். இதனால் எடுத்த காரியங்களில் பிரச்சினைகள் இன்றி நடைபெறும். சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.



Leave a Comment