வைகுண்ட ப்ராப்தியளிக்கும் ஏகாதசி விரதம்


நமது இந்து மதத்தில் அனேக விரதங்கள் இருந்த போதிலும், காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். ஏகாதசி என்பது ஒரு மாதத்தில் அமாவாசையிலிருந்து 11வது நாளையும், பவுர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும்.

ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தது இந்த 'ஏகாதசி திதி' ஆகும். அசுவமேத யாகத்திற்கு நிகரான ஏகாதசி விரதத்தை நாம் கடைப்பிடித்தால், நம்முடைய சகல பாவங்ளும் நீங்கும்.

சராசரியாக ஒரு வருடத்தில் வரும் இருபத்திநான்கு அல்லது இருபத்திஐந்து ஏகாதசிகளில், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு அதிகம். மார்கழிமாத சுக்லபக்ஷ ஏகாதசியன்று, வைகுண்டம் சென்று நாராயணனை வணங்கி தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறினார்கள் பிரம்மா மற்றும் தேவர்கள். எம்பெருமானும் அவர்களுக்கு தரிசனமளித்து அவர்களின் துன்பங்களை போக்கினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் இருக்கும் என்பது ஐதீகம்.

ஓம் நமோ நாராயணாய...



Leave a Comment