அனைத்து செல்வங்களையும் அள்ளித் தரும் குபேரர் கோயில்


சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலம் என்கிற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் கோயில்.

இந்த லக்ஷ்மி குபேரர் கோயில்தான் குபேரனுக்கு என்று தனிப்பட்ட முறையில் அமைக்கப் பட்ட உலகின் முதல் கோயில் என்றும் சொல்லப்படுகிறது.

வடக்கு நோக்கிய ஸ்தலம்: ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலையம் வடக்கு நோக்கிய ஸ்தலமாக இருக்கிறது. காரணம் வடக்கு திசையே குபேரனுக்குரிய திசை என்பதாலேயே என்றும் சொல்கிறார்கள். கோயிலுக்குள் நுழைந்து இடது புறமாகப் பார்த்தால் ஷோடஷ கணபதி ஆலயம். இதில் 16 கணபதிகள் அருள்பாலிக்கிறார்கள்.

ஈசான மூலை குபேரர்: இதை அடுத்து ஈசான குபேரர் இருக்கிறார். இந்த ஈசான குபேரர் லிங்கவடிவில் இருக்கிறார். ஈசான்ய குபேரர் லிங்க வடிவத்தில் இருப்பவரை வழிபடும் போது, சிவனின் அருள் விரைவில் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். பின்னர் நவக்கிரகங்கள் வழிபாடு, அடுத்து அக்னி மூலையில் ஸ்தலவிருட்சமான வில்வ மரத்திஞ் கீழ் அக்னி லிங்கம் உள்ளது. இந்த அக்னி லிங்கத்திற்கு சான தீபம் ஏற்றப் படுவது புனிதமாகவும் நமது வேண்டுதலுக்கு வெற்றியாகவும் கருதப் படுகிறது. மேலும் மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கவும், கடன்கள் தீரவும் இங்கு சானதீபம் ஏற்றப்படுகிறது.
குபேரனிடம் கடன் வாங்கிய வெங்கடாசலபதி: அடுத்து வெங்கடாசலபதி திருத்தலம் உள்ளது. இவர் தனது திருமணத்திற்கு குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், இந்த கலியுகம் முடியும் போதுதான் அசல் கட்டி முடியும் என்று குபேரன் கூறியதாகவும் ஐதீகம்.

காவல்காக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் : அடுத்து காவல்காக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி இருக்கிறது. மொத்தம் 64 வகை பைரவர்களில் இவர் தங்கம் போன்ற செல்வங்கள் கொடுத்து அதற்கு காவல்காக்கும் தெய்வமாகவும். குபேரனின் காவல் தெய்வமாக இங்கு வீற்றிருக்கிறார். சனி பகவானால் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இவருக்கு பூசணி தீபம், அல்லது மிளகு மூட்டை தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் தொல்லைகள் மாறி நன்மைகள் கிட்டுமாம். இவரை வழிபட உகந்த நேரம், ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி தினங்கள்.

கன்னி மூலையில் பிரம்மா சரஸ்வதி தம்பதியர்: அடுத்து கன்னி மூலையில் பிரம்மா சரஸ்வதி தம்பதியர் சகிதமாக உள்ளனர். இவருக்கு மஞ்சள் காப்பு நெஞ்சில் சாத்தி வழிபாட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டுவர நமது தலை எழுத்து மிக நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து ஹேப்பி மேன் என்று சொல்லப்படும் சீன வாஸ்து பொம்மையான லாபிங் குப்தா. இவரை கிச்சு கிச்சு மூட்டுவது போல வயிற்றில் தடவினால் அவர் மகிழ்ச்சியில் சிரிப்பார், நமக்கும் தினம் மகிழ்ச்சியை அள்ளித் தருவார் என்பது சீன மக்களின் ஐதீகம்.

நமது குபேரனை சீன மக்கள் லாபிங் குப்தாவாக வழிபடுகிறார்கள் என்பதை உணர்த்தவே இங்கு இந்த லாபிங் குப்தா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அடுத்து 18 படிகள் கொண்ட சன்னதியில் ஐயப்பன். அறுபடை வீடு கொண்ட முருகன் அனைவரையும் தரிசித்து விட்டு சென்றோமானால் குபேரன் கருவறை.

குபேரன் சன்னதி: கண்களைக் கொள்ளை கொள்ளும் விதமாக பணமாலையோடு லக்ஷ்மி. அதற்கும் சற்று கீழே குபேரன் தனது மனைவி சித்ரலேகாவுடன் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் செல்வத்தை தரும் மகாலக்ஷ்மி ஆனால் நிலையாகத் தங்கவிடமாட்டார ன்பதும் ஐதீகம். ஆனால் லக்ஷ்மியின் அருளால் பெற்ற செல்வத்தை குபேரனை வழிபட்டுத் தக்கவைத்துக் கொள்ளலாம். குபேரன் மடியில் கீரிப்பிள்ளை வைத்திருப்பார், நோயற்ற வாழ்வையும், நோயற்று செல்வத்தையும் தருபவர் குபேரன் என்பது பொருள்.

குபேரனுக்கு பூஜை செய்யும் போது, நாணயங்களால் ஓங்கி சப்தம் எழுப்பும் படி குபேர மந்திரங்களை கூறி, வழிபடவேண்டுமாம். காரணம் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விட நாணயங்கள் மூலம் நாம் அர்ச்சனை செய்யும் ஒலி கேட்டால் மிக சீக்கிரம் நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்கள் என்கிறார்கள்

நவநிதி அதிபதி என்று சொல்லப்படும் குபேரனின் எதிர்புறம் மச்சநிதியும், கச்சபம் நிதியும் வளர்க்கிறார்கள். தாவது, மீனும் ஆமையும்.மேலும் குபேரர் சங்கநிதி, பதும நிதி எனப்படும் தேவர்காலத்து பணத்திற்கும், காமதேனு, கற்பக விருட்சம் என்று சொல்லக் கூடிய மாடு, கரப்பக விருட்ச மரத்துக்கும், நீலநிதி என்று சொல்லக் கூடிய கடல் செல்வத்துக்கும், நந்தநிதி, முகுந்த நிதி சுக்கிரன் என்று சொல்லக் கூடிய அ திர்ஷ்ட தேவதைக்கும் அதிபதியாக இருக்கிறாராம் குபேரன்.



Leave a Comment