சயனக் கோலத்தில் ராமர் காட்சி தரும் தலம்


பொதுவாக ஸ்ரீராமபிரான் வில்லேந்திய கோலத்தில் சீதா, லட்சுமணர், அனுமத் சமேதராகக் காட்சி அளிப்பார். அபூர்வமாக சில தலங்களில் பட்டாபிஷேகக் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருவார். திருப்புல்லாணி தலத்தில் தர்ப்ப சயன ராமராகக் காட்சி தருகிறார்.


அதுபோல், ஸ்ரீராமர் சயனக் கோலத்தில் காட்சி தரும் ஒரு தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே, வெங்கட்டாம்பேட்டை ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீராமனின் சயனக் கோலம் அற்புதமானது.


ஆதிசேஷன் மீது ஸ்ரீராமர் படுத்திருக்க, பாதம் இருக்கும் பகுதியில் சீதை அமர்ந்திருக்க, அவ்வாறு இருந்த கோலத்தில் எழுந்து புறப்பட யத்தனிக்கும் தோரணையில் உத்தான சயனமாக ஸ்ரீராமர் காட்சி தருகிறார். அனுமன் அருகே இருக்கும் அற்புதமான காட்சி வேறெங்கும் காணக் கிடைக்காதது. இந்த சந்நிதி ஸ்ரீவேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வேங்கட்டாம்பேட்டையில் – குறிஞ்சிப்பாடி நகருக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.



Leave a Comment