மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா.... ஏப்ரல் 18-ல் கொடியேற்றம்


உலகபுகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரம் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 27-ல் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழா நடைபெறும் நாட்களில் சுவாமியும், அம்மாளும் தினமும் இருவேளை மாசி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Comment