விநாயகப் பெருமானை நினைத்து இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அவருடைய படத்திற்கோ சிலைக்கோ அருகம்புல் வைத்து அர்ச்சித்து வந்தால் எடுத்த காரியங்கள் வெற்றிப்பெற்று சகல நன்மைகள் நடைபெறும்.

ஓம் நமோ கணபதயே நமஹ
கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:
விநாயகஸ்சாருகர்ண: பஸுபாலோ பவாத்மஜ:
பத்ம புராணத்தில் உள்ள விநாயகர் துதி


‘ஓம்’  எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத  கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான  நீண்டதுதிக்கையை உடையவரே, யானையின் முகம் படைத்தவரே, கங்கா, கௌரி என இரண்டு  தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்குக் குறைவில்லாது அருள்புரிபவரே, ஒரு  தந்தத்தைக் கொண்டு அருள் புரிபவரே, அழகிய பெரிய காதுகளைக் கொண்டவரே, உலக  மக்களைக் காப்பவரே, பரமனின் புத்திரனே, உமக்கு நமஸ்காரம். எங்கள்  விக்கினங்களையெல்லாம் விலக்கி நிம்மதிப்பெருவாழ்வு வாழ,வழி செய்வீராக!

 பிரசித்திப் பெற்ற சிவாலயங்களுள் ஒன்றான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் இன்று ஆடித்தவசு திருவிழா நடைபெறுகிறது.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் வருதல் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆடித்தவசு காட்சி 11-ம் திருநாளான இன்று 27-07-18 நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு விளா பூஜையும், 8.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.05 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 2.45 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தவசுகாட்சிக்கு புறப்பாடும் நடக்கிறது. 

தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக தவசுக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசுக்காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கண் கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கிறாள் நாகம்மன். நாக தோஷம் நீக்கி பக்தர்களுக்கு நல்லாசித் தருகிறாள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினரும் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். மாரியம்மா கர்ப்பமுற்றாள். ஏழுமாத கர்ப்பிணியாக மாரியம்மன் இருந்தபோது ஒருநாள் காலை வயல்வெளிக்குச் சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார். 

பின் அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது. துடித்த கண்டம் பகுதி சற்று நேரத்தில் உயிரற்றுப் போனது. மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போதுதான் முனீஸ்வரன் தான் செய்த தவறை மனைவியிடத்தில் கூறினார்.  குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் நாகம் தீண்டி முனீஸ்வரன் இறந்தார். பின் நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அப்பகுதியினர் அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயர் வந்ததாக அவள் எங்கு சென்றாலும் நாகம் அவளின் பின்னால் வரும். ஒரு நாள் அந்த நாகத்தை அவள் உறவினர் கொன்றுவிட அதற்கு ஊர்மக்களிடம் நியாயம் கேட்டாள் நாகம்மா. அவர்கள் நியாயம் வழங்காததால் அந்த ஊர்மக்களுக்கு சாபம் தந்து அங்குள்ள வீரப்பெருமாள் கோயிலுக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொண்டாள். அதன்பின் அவ்வூரில் கடும் பஞ்சமும், நாக தீண்டி இறப்போர் விகிதமும் அதிகமானதால். ஊர் மக்கள் அனைவரும் நாகம்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவளுக்கு சிலையெழுப்பி வணங்கினர். அதன் பின் சாபம் விலகி அப்பகுதியில் வளம் பெருகியதாக தல புராணம் கூறுகின்றன.

இக்கோவிலில் நாகம்மாள் கையில் பாம்புக் குழந்தையை வைத்தபடி அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள். இக்கோயிலில் சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மேலும் நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தால் நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா ஜூலை 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
17 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதிஉலாவும் நடக்கிறது. விழா தொடர்ந்து 27-ந் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு அம்பாள் வீதி உலா, 10 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது.

26-ந் தேதி (வியாழக்கிழமை) 9 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா, 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்ப திருவிழா, 10 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா ஆகியன நடக்கிறது.