அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் !


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோயிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து, இன்று மாலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திரு கார்த்திக்கை தீப திருவிழா கொண்டாட்டங்களில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு முக்கிய பங்குள்ளது. கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது.

திரு கார்த்திகை பெருவிழாவின் போது மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபம் ஏற்றும் போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல வசதியாக, மேல் பாகம் மற்றும் கீழ் பாகத்தில்,தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.



Leave a Comment