நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி கொடியேற்றம்


நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, காந்திமதி அம்பாள் சன்னதியில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் நவம்பர் 2-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசிய சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை பிரதானச் சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைகிறது.

3-ந் தேதி முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் உலா வருதல் நடைபெறும்.

4-ந் தேதி அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் திருக்கல்யாண வைபவ விழா, காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வருதல் ஆகியவை நடைபெறும்.

4,5,6-ம் தேதிகளில் அம்பாள் சன்னதியில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா, 7-ம் தேதி இரவில் சுவாமி-அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேச வீதி உலா ஆகியவை நடைபெறும்.

இவ்வாறு நெல்லை யப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரி பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment