திருப்பதியில் செப்டம்பரில் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் சுமார் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.87.84 கோடி வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.


இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையைவிட ரூ.11.56 கோடி அதிகம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.76.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


லட்டு பிரசாதம் 97.87 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 63.49 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 9.82 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தங்கும் விடுதிகள் வாடகை மூலம் ரூ.5.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.



Leave a Comment