திருப்பதியில் 24 மணி நேர காத்திருந்து தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மட்டும் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் என்பதாலும் வார விடுமுறை என்பதாலும் திருப்பதியில் கூட்டம் அலைமோதியது. புரட்டாயில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதை புண்ணியமாகவே கருதுகின்றனர். நேற்று இரண்டாவது சனிக்கிழமை விசேஷம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வார விடுமுறை, செவ்வாய்க்கிழமை காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை என்பதால் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு திருப்பதி நோக்கி படையெடுத்தனர். இதன் விளைவு 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பின. நேற்று மட்டும் 1 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கூட்டத்தை கருத்தில் கொண்டு விஐபி தரிசனத்தை தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் உண்டியல் வசூல் ரூ. 2.46 கோடி ஆகும். கூட்ட நெரிசலால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டது.



Leave a Comment