சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் பவனி


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா 3-வது நாளில் ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை மலையப்ப சாமி சின்ன சே‌ஷ வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சாமி வேடம் அணிந்தும், பெண்கள் கோலாட்டம் நடனமாடியும் ஊர்வலம் முன்பு வந்தனர்.

3-ம் நாளான இன்று காலை 9 மணிக்கு மலையப்ப சாமி சிம்ம வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று இரவு முத்து பல்லக்கு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நேற்று பக்தர்கள் ரூ.1 கோடியே 90 லட்சம் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.



Leave a Comment