ஞானகிரிக் குன்றில் அருளும் ரங்கநாதர்


சென்னை செங்கல்பட்டு கடந்து மதுராந்தகம் அருகில் உள்ளது ஞானகிரி குன்று. இங்கெ அருள்பாலிக்கிறார் ரங்கநாதர்.


ஞானகிரிக் குன்றின் மீது மிகவும் பழைமையான ஆலயத்தில் கோயில் கொண்டுள்ளார் இந்த ரங்கநாதர். 1994ன் போது மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் உற்ஸவ மூர்த்தி பரிவேட்டை நிகழ்ச்சிக்கு இந்தக் குன்றின் அருகே வந்தபோது, இங்குள்ள ஹனுமான் கோயிலை எடுத்துக் கட்டினர் பக்தர்கள்.

பின்னர் அருகே இருந்த இந்த ரங்கநாதர் கோயிலும் பக்தர்களின் கண்களில் பட்டது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு, இப்போது புதுப் பொலிவு பெற்று சிறப்பாக பூஜைகளும் நடந்து வருகின்றன.


வார நாட்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் வார இறுதி நாட்களில் 7 மணி முதல் 12 மணி வரையும் கோயில் சந்நிதி திறந்திருக்கும்.
மதுராந்தகத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள கல்லார் பாலத்தை ஒட்டி இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்.



Leave a Comment