வரலட்சுமி விரதம் அனுசரிக்கும் முறை!


வரலட்சுமி வரதம் இருப்பதற்கு உங்கள் உடலை வருத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை ஒரு முகபடுத்தி ஸ்ரீ மகாலட்சுமி  தேவியை நினைத்தாலே போதும். இங்கே விரதத்திற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்களும், உடல் நிலை  சரியில்லாதவர்களும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வழக்கமாக விரதமானது சூரிய உதயமான  நேரத்தில் இருந்து பூஜை நல்லபடியாக முடியும் வரை இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு தகுந்த நேரங்களையும் எடுத்துக்  கொள்ளலாம். பச்சை வாழைப்பழங்களை இந்த நாளில் சமைக்கக் கூடாது. சுண்டல் இந்த நாளுக்கான முக்கியமான உணவாக எடுத்துக்  கொள்ளலாம். முதலில் விநாயகர் பூஜை தொடங்கி கலச பூஜை, பக்தி பாடல்கள், மகாலட்சுமி பூஜை, பிரார்த்தனை, ஆர்த்தி என்று  வழிபடலாம்.

பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி,  சாம்பிராணி, எலும்பிச்சை பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்து விளக்கு, நோன்பு கயிறு மற்றும் நிவேதனப் பொருட்களான  பொங்கல், பாயாசம் மற்றும் உங்களால் முடிந்த உணவுகள் . மேலும் நகை மற்றும் பணம் வைத்து தொட்டு கும்பிடலாம்.வரலட்சுமி பூஜை  செய்ய முடியாத தருணம் :சில சமயங்களில் உடல்நலம் சரியின்மை , பெண்களுக்கு மாதவிலக்கு போன்ற காரணத்தால் செய்ய  முடியாமல் போகலாம். அவர்கள் அடுத்த வார வெள்ளிக்கிழமை அல்லது நவராத்திரி வெள்ளிக் கிழமை நாட்களில் இந்த பூஜையை செய்து  அதே பலனை பெறலாம்.

வரலட்சுமி நோன்பு கயிறு  இந்த விரதத்தின் முக்கிய பொருள் வரலட்சுமி விரத கயிறு. விரதத்தின் முடிவில் மஞ்சள் நூலை(சரடு)  கையில் கட்டிக் கொள்வார்கள். எட்டு லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமி என்பதால் அந்த கயிற்றில் ஒன்பது  முடிச்சுகளுடன் நடுவில் பூ சுத்தி பூஜையில் வைத்து வழிபட்டு எல்லாரும் தங்களது வலது கைகளில் கட்டிக் கொள்வர்.வரலட்சுமி  பூஜையின் போது செய்யக் கூடாதவை  யாரையும் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. ஏனெனில் இந்த  பூஜையானது எல்லாரும் மனசார வேண்டி வழிபடுவது முக்கியம்.இந்த பூஜையை புதிதாக ஆரம்பிக்க போறீங்கள் என்றால் இதை பற்றி  தெரிந்தவர்களிடம் அதன் முறைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு செய்யவும். இந்த பூஜையானது சுமங்கலி பெண்கள் செய்யக் கூடிய  பூஜை. கல்யாணம் ஆகாத பெண்கள் அவர்கள் அம்மாக்களுடன் சேர்ந்து கலந்து கொண்டு வழிபடலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரலட்சுமி  108 போற்றியை தினமும் இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.



Leave a Comment