ஆஞ்சநேயரை...எப்போது வழிபடலாம்?!


அமாவாசை, கேட்டை, மூல நட்சத்திர நாட்களிலும், புதன், வியாழன், சனிக்கிழமை நாட்களிலும் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

ஆஞ்சநேயரை வழிபட ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி எனப் பார்க்க வேண்டியதில்லை... எந்த நேரத்திலும் அவரை வணங்கலாம்.

ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது வெற்றிலைமாலை, வடை மாலை, துளசி மாலை ஆகியவை ஆகும்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆஞ்சநேயரின் ஜெயந்தி நாளாகும். அன்று அவருக்குப் பூஜை செய்வது சிறப்பாகும்.

ஆஞ்சநேயர் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்தால் கோடி நன்மை கிடைக்கும்.

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே, அனுமனை வழிபட்டால் நவக்கிரகப் பாதிப்பு ஏற்படாது என்பது நம்பிக்கை.



Leave a Comment