அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் முறை!


ஆண்டவனிடம் முழுமையாக நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் முறையே 'அஷ்டாங்க நமஸ்காரம்' ஆகும். இந்த நமஸ்காரம் செய்பவர்கள் மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள், செல்வம், நம்மைச் சார்ந்துள்ள கால்நடைகள் அத்தனையையும் மறந்துவிட்டு, சுயநல பிரார்த்தனை எதுவும் மனதில் இல்லாமல் பூரணமாக பகவானிடம்  தன்னை அர்ப்பணித்துவிட வேண்டும்.

முதலில் தலையை தரையில் வைத்து, மார்பு பூமியில் படும்படி வலக்கையை முன்னும், இடக்கையை பின்னும் நேரே நீட்டி, பின்னர் அதே முறையில் மடக்கி, வலத்தோளும், இடத்தோளும் தரையில் பொருந்தும்படி கைகளை இடுப்பை நோக்கி நீட்டி  வலக்காதை முதலிலும், இடகாதை பிறகும் பூமியில் படும்படி செய்ய வேண்டும். இந்த நமஸ்காரத்தை 3, 5, 7 என ஒற்றைப்படை எண்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். கொடிமரத்தின் அருகே தான் இந்த நமஸ்காரத்தை செய்ய வேண்டும்.



Leave a Comment