நெல்லை - காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா!


திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில்  நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இந்த திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெறுவிருக்கிறது

தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும், பஞ்ச மூர்த்திகளுடன் 4 ரதவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இத்திருவிழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த புனித நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment