திருப்பதிக்கு 6 ஆயிரம் கிலோ பூமாலை


ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி திருமலைக்கு மலர்கள் தொடுத்து அனுப்பும் பணி ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கரிய சாபா சார்பில் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், வரும், 15ல் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்காக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் மூலம், ஆறு டன் பூக்களை, மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

துளசி, ரோஜா,மல்லிகை,மருவு,சாமந்தி,தாமரை,அரளி போன்ற 6 டன் மலர்களை தொடுக்கும் பணியை சபாவின் சடகோப ராமானுஜதாச சந்திரசேகரன், கனகராஜ்,பெரியசாமி,வெங்கடேசன் ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர். 500-க்கும் மேற்பட்ட பெண்களும்,பக்தர்களும் மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை தொடங்கி மாலை வரை மலர்கள் தொடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு லாரிகள் மூலம் திருமலைக்கு மலர்கள் அனுப்பப்பட்டன.



Leave a Comment