நான்கு வகையான திருநீறுகள்!


மனிதர்கள் தெரிந்தும் தெரியாமல் செய்யும் தவறுகளை நீறச் செய்து வாழ்வின் உயர் நிலை அடைய செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படும் திருநீர் எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும்.

அத்தகைய சிறப்புவாய்ந்த தீருநீறு நான்கு வகைப்படுகிறது அவை கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்

கல்பம் - நோயின்றி ஆரோக்கியத்துடன், கன்றுக் குட்டியுடன் உள்ள தூய பசுவின் சாணத்தை தாமரை இலையில் தாங்கி எடுத்து, அதனை பஞ்சு, பிரம்ம மந்திரங்கள் ஓத அக்னியில் இட்டு எரிப்பதன் மூலம் கிடைப்பது

அனுகல்பம் - தோட்டம் காடுகளில் மேயும் பசுக்களின் சாணத்தை அக்னியில் எரிப்பதன் மூலம் கிடைப்பது.

உபகல்பம் -  பசுக்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் தொழுவத்திலிருந்து எடுக்கப்பட்டசாணத்தை அக்னியில் எரித்து, அதன் மூலமாகக் கிடைப்பது

அகல்பம் - பல பசுக்களின் சாணத்தை ஒன்றாக்கி முறையாக மந்திரங்கள் ஓதாமல் நெருப்பில் எரித்து கிடைப்பது.



Leave a Comment