ஆடி அமாவாசை - இராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம்!


இராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா  நடைபெற்று வருகிறது. அதன்படி முக்கிய நிகழ்வாக இன்று  அம்பாள் தங்கப்பல்லக்கில் எழந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 8.50 மணிக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு தங்கக் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 

மேலும் இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளுகின்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இதற்காக திரளான பக்தர்கள் இராமேஸ்வரத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பக்தர்கள் வருவதையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.



Leave a Comment