அண்ணாமலையார் கோவிலில்...11ந் தேதி ஆடிப்பூர உற்சவம்!


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் உற்சவம் மிகவும் பிரசித்திப்பெற்றது. மற்ற சிவாலயங்களில், சக்தி தலங்களில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரங்கள் செய்து மட்டுமே வழிபடுவது வழக்கம். ஆனால் திருவண்ணாமலையில் வீதிஉலா, தீர்த்தவாரி, வளைகாப்பு அலங்காரம் ஆகியவற்றோடு அன்று இரவு தீ மிதிக்கும் விழாவும் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடி மாத உற்சவம் நாளை மறுநாள் சனிக்கிழமை (11-08-2018) தொடங்கி 10 நாட்கள் நடைபெறவிருக்கிறது. 10 நாட்களும் காலையிலும், மாலையிலும் அஸ்திரதேவர்  எடுத்துச் செல்லப்பட்டு பராசக்தி வடிவில் மாடவீதி உலா நடைபெறும். மேலும் 10-வது நாள் அதாவது வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் தினத்தன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் உச்சிகாலத்தில் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தீமிதித்தல் விழா நடைபெறும். இந்த தீ மிதி விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்குபெறவிருக்கிறார்கள்



Leave a Comment