திருப்பதி கோயில் குளத்தில் புனரமைப்பு பணி நிறைவு


திருப்பதி கோயில் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தி, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் புனரமைப்பு பணிகள் முடிந்து தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து வரும் 9ம்தேதி முதல் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 16ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 12ம்தேதி முதல் 16ம்தேதி வரை பல்வேறு பூஜைகள் நடக்கிறது. மேலும் செப்டம்பர் மாதம் 13ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 10ம் தேதி முதல் தெப்பக்குளம் தூய்மைப்படுத்தி, சீரமைக்கும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் நிறைவு பெற்றதால் நேற்று முதல் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 9ம்தேதி முதல் தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment