சென்னியம்மன் கோயிலில்...ஆகஸ்டு 3-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா!


செங்கம் அருகே நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நேற்று (29-07-18) நடைபெற்றது.செங்கத்தை அடுத்த நீப்பத்துறையில் அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரச்சன வெங்கட்ரமண பெருமாள் சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 73ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

இந்த நிகழ்சியைத் தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து, தினமும் இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து வருகின்ற ஆகஸ்டு 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா நடைபெறும், பின்னர், தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடுவர். விழாவையொட்டி, சேலம், தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாலை, செங்கம் ஆகிய பகுதியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து, பொங்கல் வைத்து அங்குள்ள சென்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.



Leave a Comment