முற்பிறவி வினைகளைத் தீர்க்கும் நந்தியம் பெருமான்!


பிரதோஷ காலங்களில் சிவன் கோயிலில் வீற்றிருக்கும் நந்தீஸ்வரருக்குத் முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். பிரதோஷ காலத்தில் ஆலகால விஷத்தை அருந்திய ஈசன், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிந்தார் எனவே தான் பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. மேலும் சிவபெருமானே, நந்தியம்பெருமானாக பிறந்து, கணங்களில் தலைவராக மாறினார் என்று லிங்கப்புராணத்தில் கூறப்படுகிறது. பிரதோஷங்களில் தவறாது கலந்து கொண்டு நந்தியை வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் கயிலாயத்தின் வாசலை காவல் காப்பவராகவும் போற்றப்படுகிறார் நந்தி பகவான். இவரிடம் அனுமதி பெற்றுதான், கயிலையில் வீற்றிருக்கும் ஈசனைப் பார்க்க முடியும் என்பது நம்பிக்கை அதே வழிமுறையைதான் நாம் சிவாலயங்களிலும் பின்பற்றுகிறோம். முதலில் நந்தியை வணங்கிய பிறகே, மூலவரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும் பிரதோஷ நாட்களில் நந்தியம்பெருமானை வணங்கினால் ஞானம் சேரும், புகழ் கல்வி தேடி வரும். முற்பிறவி வினைகள் யாவும் மறையும் என்பது நம்பிக்கை.



Leave a Comment