பெண்களின் சபரிமலை…ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்!


கேரள மாநிலத்தின் தலைநகரமாகத் திகழும் திருவனந்தபுரம் ஒரு புகழ்மிக்க புண்ணியத் தலமாகும். நம்மாழ்வாரின் பாடல் பெற்ற இத்திருத்தலம் 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்றாகும். இங்குள்ள ஆற்றுக்கால் அம்மன் கோவில் என்கிற தேவி பகவதியின் திருக்கோயில் உலகப் புகழ் பெற்றது. மேலும் இத்திருத்தலத்திற்கு சிறப்பு பெயராக பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அம்மனுக்கு பொங்கல் படைக்கும் திருவிழா, மகளிர் மட்டும் கலந்து கொண்டு தேவியை வழிபடும் பெருவிழாவாகும். இத்திருவிழாவின் போது சுமார் பதினைந்து லட்சம் பெண்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் இன்னல்களைத் தீர்த்து வைப்பதில் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு நிகர் அந்த அம்மன் தான். அம்மனை மனதார வழிபடுவோர்க்கு நோய்கள் நீங்குகின்றன, வேலையில்லா பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது,மேலும் திருமணத்தடைகள் யாவும் நீங்குகின்றன.

ஆற்றுக்கால் தேவி சிலப்பதிகாரம் போற்றும் கண்ணகியேயாவாள். மதுரையில் தன் கணவனை இழந்த கண்ணகி கோபங்கொண்டு மதுரை நகரை தீக்கிரையாக்கிவிட்டு, கொடுங்கலூருக்குச் சென்றாள். என்றும், செல்லும் வழியில் இன்று கோயிலிருக்கும் இடத்தில் தங்கினாள் என்றும், கண்ணகிக்கு அப்போது பொதுமக்களால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டதென்றும் இக்கோவில் வரலாறு கூறுகிறது. மேலும் ஆற்றுக்கால் என்றால் நதிக்கரை என்பது பொருள். நதி தீர்த்தத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டப்பட்டதால் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று இத்தலத்திற்கு பெயர் வந்துள்ளது.

இக்கோயிலின் ராஜகோபுரத்தில் சிலப்பதிகார நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. பெண்களின் குறைதீர்க்கும் அம்மனாக விளங்குவதால் இத்தலத்திற்கு அணைத்து நாடுகளிலிருந்து மக்கள் பெருமளவு வந்து வணங்கி செல்கின்றன.



Leave a Comment