வாஸ்து தோஷம் விலக மகாயாகம்!


வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்து கொண்டிருக்கும் திருக்காட்சி இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான வாழ்க்கை வாழவும், குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்தவும், பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், சுகாதார பிரச்சினைகள் குறைக்கவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வருகிற 27.07.2018 வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாஸ்து பகவானுக்கு தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை என விதவிதமான சாதங்கள், சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை போன்ற பூமிக்கடியில் விளையும் பொருட்களை நைவேத்யம் செய்து வாஸ்து ஹோம பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று செல்கின்றனர். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்றவற்றை படைத்து யாகத்தில் பங்கேற்கவிருக்கிறார்கள்.



Leave a Comment