சிவ அம்சமாக காட்சியளிக்கும் இருக்கன்குடி மாரியம்மன்


அம்மா….மாரியம்மா…இருக்கன்குடி தாயே!

என்று ஓங்கி ஒலிக்கும் பக்தர்களின் குரலோசை இத்திருத்தலத்தில் எப்போதும் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி இங்கு 300 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். சாணக் கூடைகளுடன் அங்கே ஆற்றில் நீராட வந்தார்கள் அப்பகுதி கிராமப் பெண்கள். கூடைகளைக் கரையோரமாக இறக்கி வைத்துவிட்டு நீராடி முடித்தவர்கள் கூடைகளைத் திரும்பவும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது தரையிலிருந்த தனது கூடையை அசைக்க கூட முடியாமல் திணறியபோதே அருள் வந்து ஆட தொடங்கினாள் அந்தப் பெண் நான் தான் மாரி என்றும் அந்த இடத்தில் தான் புதைந்து இருப்பதாகவும். என்னை வெளியே எடுத்து கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறினாள். மேலும் என்னைத் தேடி வருகிறவர்களுக்கு எதுவும் இல்லையென்று நான் கூறமாட்டேன் என்றும் சத்தியம் செய்து. அந்த கடைக்காரப் பெண் மூலமாக அன்னையே ஆணை பிறப்பிக்க. பிறகு எழந்ததுதான் இந்த திருக்கோயில்

இத்திருக்கோயிலில் மூன்று கால பூஜைகளும் முறையாக நடக்கும் இத்திருக்கோயிலில், பக்தர்களின் வசதிக்காக கருவறை சாத்தப்படாமல் பிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்தே வைத்திருக்கிறார்கள்.

பிள்ளை வரம் வேண்டுவோர், திருமண பாக்கிகயத்துக்காக் காத்திருப்போர், குடும்ப்ப் பிரச்சினைகளால் தொல்லைக்கு ஆளாவேர் என எல்லாப் பிரச்சினைகளுக்குமே தீர்வாயிருக்கும் அன்னைக்கு. பக்தர்கள் நேர்ந்து அக்கினிச்சட்டி எடுப்பவர்கள், ஆயிரங்கண் பானை எடுப்பவர்கள், மாவிளக்கு போட்டு பொங்கல் வைப்பவர்கள், சொந்த பந்தங்களுடன் குடும்பத்துடன் வந்து கிடா வெட்டி மொட்டை அடிப்பவர்கள், என எப்போதுமே இத்திருத்தலத்தில் கூட்டம் நிரம்பி காணப்படும். குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவிலைச் சுற்றியிருக்கும் அணைத்து கிராம மக்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்குவதை காணும் போது சமத்துவம் நிறைந்த கோவிலாக இக்கோவில் காணப்படுகிறது. ஒரு கிராமத்து அளவில் மட்டுமே பேசப்பட்டு வந்த இத்திருக்கோயில் இன்று அகிலம் முழுதும் புகழ் பெற்று அருள்பாலித்து தான் எல்லையை விரிவு படுத்திக்கொண்டே வருகிறாள் இருக்கன்குடி மாரயம்மன்.



Leave a Comment